மடிப்பாக்கம் - கீழ்க்கட்டளை இடையே சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களால் போக்குவரத்து நெரிசல்; விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஆலந்தூர்: மடிப்பாக்கம் - கீழ்க்கட்டளை இடையே சாலை நடுவில் உள்ள மின்கம்பங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்  உள்ளது. மடிப்பாக்கம் - கீழ்க்கட்டளை இடையே உள்ள மேடவாக்கம் பிரதான சாலையினை அகலப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்காக நெடுஞ்சாலை துறையினர் ஏராளமான  கடைகளை இடித்து அகற்றினர். கரடுமுரடாக காணப்பட்ட அந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று சாலையும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின் இங்குள்ள மின்கம்பங்கள் நடுரோட்டில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி இதுவரையில் துவங்கப்படாமல் உள்ளது.  ஆங்காங்கே நடுரோட்டில் உள்ள மின்கம்பங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் பாதிக்கப்படுகிறது.பைக்கில் செல்வோர் நடந்து செல்லும் முதியோர்கள், பள்ளிமாணவர்கள் இதில் முட்டிமோதி கீழே விழுந்து அடிப்பட்டு பின் எழுந்து செல்லும் நிலை உள்ளது.  மேலும் இந்த மின் கம்பங்களாலும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு குறித்த நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் சம்மந்தப்பட்ட மின் வாரிய  அலுவலகத்துக்கு உரிய தொகை செலுத்தாதால் தான் இந்த பணிகள் தடைப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறையினர் மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி உடனடியாக இந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: