தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதா?....... உடற்கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தலையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடியில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் , சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி வன்முறையில் முடிவடைந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில், 12 பேருக்கு தலை அல்லது மார்பில் குண்டு பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் பாதி பேர் பின்பக்கம் இருந்து சுடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. போராட்டத்தில் இறந்த மிக இளம் வயது பெண்ணான ஸ்னோலினின் பின்மண்டையில் பாய்ந்த குண்டு வாய் வழியாக வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 40 வயதான ஜான்சியின் காதிலும், 34 வயதான மணி ரஞ்சனின் நெற்றியிலும் குண்டு பாய்ந்துள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: