பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: பிளாஸ்டிக் மீதான தடையை நீக்ககோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து கடந்த ஜூன் 25 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2019 ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

மத்திய அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் சட்டம் 2016-ன் படி விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அதனால் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு கொண்டுவந்தது நல்ல திட்டம்தான் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதேபோல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதனையடுத்து பிளாஸ்டிக் மீதான தடையை நீக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: