போகல... ஆனா, போன மாதிரி! ரயில்வே புது முயற்சி

புதுடெல்லி: ரயில் பயணிகள், மாணவர்களுக்கு சுற்றுலா தலங்களை இருந்த இடத்தில் இருந்தே கண்டு களிக்க புது முயற்சியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.வீடியோவிலேயே ஒரு இடத்தை நேரில் சென்று பார்த்ததை போன்ற உணர்வை தருவது  விர்ச்சுவல் ரியாலிடி (விஆர்). இதற்கென விஆர் முப்பரிமாணத்துடன் பார்க்கக்கூடிய வீடியோக்கள் பல யூடியூப் உட்பட பல்வேறு இணைய  தளங்களில் உள்ளன. இதை கூகுள் கார்ட்போர்டு மூலம் பார்க்க வேண்டும்.

 ரயில்வேயின் பாரம்பரிய இடங்களை இப்படி ஒரு வசதியுடன் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. முதலில் கல்கா சிம்லா ரயில்வே, சத்திரபதி சிவாஜி டெர்மினஸ் போன்றவை விஆர் எபெக்ட்டுடன் பதிவு செய்யப்பட இருக்கின்றன.  ரயிலில் செல்லும்போதே இவற்றை பார்க்க ரயில் பயணிகளுக்கு வாடகைக்கு பிரத்யேக விஆர் கண்ணாடிகள் வாடகைக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கும் இந்த வசதி செய்து தர என்ஜிஓவுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.  இதன்மூலம் மாணவர்கள் ஒரு பாரம்பரிய இடத்தை பற்றி பாடம் நடத்தும்போது, நேரடியாக அங்கு சென்று பார்த்தது போன்ற உணர்வை பெறலாம். இந்த புதிய அனுபவம் ஆசிரியர்களுக்கும் கற்பித்தலில் புதிய அணுகுமுறை  கொண்டதாக இருக்கும் என ரயில்வே (ஹெரிடேஜ்) செயல் இயக்குநர் சுப்ரதா நாத் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: