பொறியாளர்கள் இல்லாததால் கோயில் திருப்பணி, கட்டுமான பணி முடங்கியது: 46 பேரை நியமிக்க கோரி 6 துறைகளுக்கு ஆணையர் கடிதம்

சென்னை: பொறியாளர் காலிபணியிடம் காரணமாக கோயில்களில் திருப்பணி, கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருப்பணிகள் மட்டுமின்றி கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திருப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயாரித்தல், அவற்றை ஆய்வு செய்தல் ஒப்பந்தப்புள்ளி கோருதல், அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்த துறையில் பொறியியல் பிரிவு இயங்கி வருகிறது. இந்த பிரிவில் இருந்து மொத்தம் 71 (48 பொறியாளர் பணியிடங்கள் மற்றும் 23 வரை தொழில் அலுவலர்) பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 46 பணியிடம் காலியாக உள்ளது.

இதனால், கோயில்களின் திருப்பணி மற்றும் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு பெருமளவிலான பணிகள் முடங்கி உள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் 6 துறைகளை சேர்ந்தவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயற்பொறியாளர் தலைமையிடம்-1, உதவி கோட்ட பொறியாளர் தலைமையிடம்-1, உதவி பொறியாளர் கட்டுமானம் மற்றும் மின்-2, வரைதொழில் அலுவலர் தலைமையிடம்-2, உதவி கோட்ட பொறியாளர்-8 (இணை ஆணையர் அலுவலகங்கள்), உதவி பொறியாளர் (கட்டுமானம்)-14 (உதவி ஆணையர் அலுவலகங்கள்), உதவி பொறியாளர் (மின்)-3, முதுநிலை வரைதொழில் அலுவலர் -2 (சென்னை, திருச்சி இணை ஆணையர் அலுவலகம்), வரைதொழில் அலுவலர்-4, இளநிலை வரைதொழில் அலுவலர் -9 உள்ளிட்ட பணியிடங்களை அயற்பணியில் நியமித்து உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: