முட்டை விலை 5 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில்  நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம்  நடைபெற்றது. இதில் முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 435 காசாக நிர்ணயம்  செய்யப்பட்டது. புத்தாண்டு,  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் தயாரிக்க முட்டை தேவை அதிகரித்துள்ளதால்,  விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற  மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் வருமாறு: ஐதராபாத் - 418, விஜயவாடா - 420, பர்வாலா - 432, மும்பை - 471, மைசூர் - 437, பெங்களூரு - 435, கொல்கத்தா - 471, டில்லி - 455 காசுகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: