கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் தமிழக எம்பிகள் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் தமிழக எம்பிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இன்று மாநிலங்களவையில் கஜா புயல் நிவாரணம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று பல்வேறு காட்சிகளை சேர்ந்தவர்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுகவை சேர்ந்த மைத்ரேயன், திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா ஆகியோர் கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பியுள்ளனர். கஜா புயல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கஜா புயல் பாதிப்பு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடிதனை ஏற்றுக்கொண்ட அவர் இன்று விவாதம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இன்று நாடாளுமன்றம் சுமுகமாக நடக்குமா அல்லது நேற்று போலவே கூச்சல், குழப்பம் என்று பிரச்சனைகள் ஏற்படுமா என்று எதிர்பாக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேகதாது அணை குறித்து உடனடியாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என  மக்களவையில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதிமுகவை சேர்ந்த மக்களவை குழு தலைவர், அரக்கோணம் ஹரி, திருச்சி குமார் ஆகியோர் கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஸிரோ ஹவர் என சொல்லப்படும் அவசர விஷயங்களை விவாதிக்கும் நேரத்தில் மேகதாது அணை குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று நடைபெற உள்ள மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க தீர்மானம் செய்துள்ளனர்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: