சாலையோரம் வசித்த மூதாட்டி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சாலையோரம் வசித்த மூதாட்டியை 5 நிமிடத்தில் அவரது குடும்பத்தினரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசிப்பவர்களை மீட்டு வசிப்பிடங்களில் சேர்க்கும் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை 1,786 தெருவோரம் வசிக்கும் வீடற்ற ஆண்கள், பெண்கள், முதியோர்கள், திருநங்கைகள் ஆகியோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அச்சைலால் (53)  என்பவரை அவரது குடும்பத்தினரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் வீடற்றவர்கள் தொடர்பான  தகவலை 1913, 94451 90472, 044-2530 3849 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்  தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தனர்.

இந்த செய்தி நாளிதழ்களில் வெளியானது. இதை பார்த்த நீலாங்கரையை சேர்ந்த ஒருவர் தனது உறவினரான கண்ணியம்மாள் என்பவரை காணவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அவரது புகைப்படத்தை அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். அவர் புகைப்படத்தை அனுப்பியுடன் அதை வசிப்பிடங்களை பராமரிக்கும் என்ஜிஓக்கள் உள்ள வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். பகிர்ந்த 5  நிமடத்தில் அவர் திருவொற்றியூர் மண்டத்தில் உள்ள வசிப்பிடத்தில் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியை அவரது குடும்பத்தினரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: