சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை 491 கோடி சொத்துவரி வசூலித்து சாதனை

சென்னை: சென்னை மாநகராட்சியில் இந்த அரையாண்டில் ரூ.491 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரியை உயர்த்தி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் சொத்தவரி ெதாடர்பான சுயமதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி சென்னையில் சொத்துவரி செலுத்தும் 12 லட்சம் பேரில் 8.5 லட்சம் பேர் தங்களின் சொத்துவரி சுயமதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து புதிய சொத்துவரி தொடர்பான விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் புதிய சொத்துவரி தொடர்பான அறிக்கையும் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அதில், ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால், 15 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய சொத்துவரிதயானது தாங்கள் செலுத்தி வரும் பழைய சொத்துவரியை விட பல மடங்கு அதிகமாக உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து சொத்துவரி கணக்கீடு செய்யும் முறையை அறிந்து கொள்ள மாநகராட்சி அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போது வரை ரூ.491 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட ரூ.24 கோடி அதிகமாகும். மேலும் 10 ஆயிரம் பேர் புதிய சொத்துவரியை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இந்த மேல்முறையீட்டு மனுக்களை விரைவாக முடிக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: