கண்ணப்பர் திடல், மூர்மார்க்கெட் பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு

சென்னை: சென்னை கண்ணப்பர் திடல், மூர்மார்க்கெட் பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்து தருமாறு திமுக எம்எல்ஏ கோ.எஸ்.ரவிச்சந்திரன் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எழும்பூர் தொகுதி 104வது வார்டில் சுந்தரம் பிள்ளை தெருவை சுற்றிய பகுதி தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 61வது வார்டில் உள்ள மாநராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறிய அளவில் கழிவுநீர் அகற்று நிலையம் அமைக்க வேண்டும். இதற்கான தடையில்லா சான்றிதழை குடிநீர் வாரியத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

104வது வார்டு திடீர் நகரில் உள்ள 600 குடும்பங்கள் கழிப்பிட வசதி இல்லாமல் அருகில் உள்ள திறந்தவெளி நிலத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் மலேரியா, டெங்கு போன்ற உயிர் கொல்லி நோய்கள் பரவுகின்றன. எனவே அந்த திறந்தவெளி நிலத்தை வகை மாற்றம் செய்து அந்த மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தர பரிந்துரை வழங்குமாறு வேண்டுகிறேன். 77ம் வார்டு கே.பி. பூங்கா பகுதியில் அடுக்குமாடி வீடுகள் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்குள்ள வீடுகளில் கண்ணப்பர் திடல், மூர்மார்க்கெட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் மக்களை குடியமர்த்துவதற்கு ஏற்ற வகையில் ஒதுக்கீடு செய்து தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாநகராட்சி கமிஷனர் உறுதி அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: