கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யாதது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எத்தனை வாகனங்கள் விதிகளை மீறியுள்ளன?, அவற்றின் மீதான நடவடிக்கை என்ன?என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை கோரி கலியபெருமாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: