மேகதாது அணை விவகாரம் புதுச்சேரி சிறப்பு சட்டபேரவை 12ம் தேதி கூடும்?

புதுச்சேரி: கர்நாடகா அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த விவகாரம் தமிழகம், புதுச்சேரி மாநில விவசாயிகளிடம்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை தமிழக அரசு, சிறப்பு சட்டசபையை கூட்டி  கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல், புதுவை சட்டசபை சிறப்பு  கூட்டம் வரும் 12ம் தேதி கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுசம்பந்தமாக சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலர் வின்சென்ட்  ராயருடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான அதிகாரப்பூர்வஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: