நெல்லை கலெக்டர் ஆபீசில் போராட்டம் நடத்த தடை

நெல்லை:  ஒவ்வொரு திங்கட் கிழமையும் கலெக்டர் அலுவலக வளாகம் போராட்டங்களால் திக்குமுக்காடுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து, கந்துவட்டி கொடுமையால் மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி சாருண்யா, அக்சய பரணிகா ஆகியோருடன் தீக்குளித்து தற்கொலை செய்தார். நாடு முழுவதும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திலிருந்த பல வாசல்கள் மூடப்பட்டு ஒரு வழியாக மட்டுமே, தீவிர சோதனைக்குப் பின் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறைந்தபாடில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இனி எந்த போராட்டத்திற்கும் அனுமதியில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: