வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வாளர்  டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் போது அவர்கள் செய்யும் தவறுகளில் போக்குவரத்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது என்றும்,  குறிப்பாக 3 முறைக்கு மேல் ஒரே தவறை செய்யும் பற்றத்தில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற விதிகள் இருந்தும் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தினால் அதில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி வினித் கோத்தாரி, அனிதா சுமத் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லாரி ஓட்டுனர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக நவம்பர் 19-ம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும், அதன்படி வாகன ஓட்டுநர் அனைவருமே அசல் ஓட்டுநர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் உரிமத்தையோ கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள் மனு தாரர் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு  உத்தவிட்டதால் இந்த வழக்கு மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்ல என்று கூறி முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: