காமராஜர் பல்கலைக்கழக தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வினாத்தாள் : மறுதேர்வு நடத்த வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று நடைபெற்ற தேர்வில், தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி உள்ளது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு நடைபெற்ற தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்தி நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று பிஏ எகனாமிக்ஸ் தேர்வு நடைபெற்றது. இதில் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், தேர்வுக்கு தமிழிலேயே படித்து தயாராகி வந்தோம். ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட வினாத்தாளை வழங்கியதால், தேர்வில் தோல்வியை தழுவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும். தமிழில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள் மூலமாக மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்’’ என்றார். இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ``பிஏ எகனாமிக்ஸ் பயிலும் மாணவ, மாணவிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியாக கல்வி கற்று வருகின்றனர். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லி வாய்மொழி உத்தரவிட்டிருந்ேதாம்’’ என்று கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: