மும்பை பங்குச்சந்தையில் இந்திய நிறுவனங்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டி.சி.எஸ்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. புதன் கிழமை (நேற்று) மும்பை பங்குச்சந்தையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 4.67 சதவீதம் அதிகரித்தது. ஆயிரத்து 982 ரூபாய் 15 காசுகளாக இருந்த ஒரு பங்கின் விலை, ஆயிரத்து 976 ரூபாய் 55 காசுகளாக உயர்ந்தது. இதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7 லட்சத்து 41ஆயிரத்து 677 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இதற்கிடையே முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்டிரீசின் சந்தை மதிப்பு 7 லட்சத்து 26 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் சந்தை மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசை பின்னுக்குத் தள்ளி,. டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: