இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை தடுக்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியின் உபரி நீரை தடுக்கும் வகையில் 2 அணைகள் கட்டுவது உள்பட 3 திட்டங்களை விரைவு படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஷபூர் கண்டி அணை திட்டம், பஞ்சாபில், சட்லஜ் - பீஸ் இணைப்பு திட்டம், காஷ்மீரில் உஜ் அணை திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டங்கள், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை மற்றும் தாமதமான நடவடிக்கை காரணமாக சிக்கல் நிலவி வந்தது. தற்போது இதனை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிந்து நதி உடன்படிக்கையின் படி இந்தியா 93-94 சதவீத தண்ணீரை இந்தியா பயன்படுத்தி வருகிறது. மீதமுள்ள தண்ணீர் பாகிஸ்தானுக்குள் அனுப்படுகிறது. சிந்துநதி தண்ணீர் ஒப்பந்தப்படி, சட்லஜ், பீஸ் மற்றும் ராவி நதிகளில் பாயும் தண்ணீர் இந்தியாவிற்கு சொந்தமானது. செனாப், ஜீலம் மற்றும் இந்தூஸ் ஆகிய நதிகளில் பாயும் தண்ணீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: