அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையை சேர்ந்த மாணவி தேர்வு

கேம்பிரிட்ஜ்: அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஸ்ருதி பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழகத்தின் இளநிலை கவுன்சில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஸ்ருதியின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்களாவர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்களின் சக்திவாய்ந்த அமைப்பாக இளங்கலை கவுன்சில் உள்ளது. இதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்ருதியும், துணைத் தலைவர் பதவிக்கு அவருடன் சேர்ந்து ஜூலியா ஹியூசா (20) என்பவரும் போட்டியிட்டனர்.

தேர்தலில் ஸ்ருதி மற்றும் ஜூலியா ஆகியோர் 41.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இரண்டாவது இடத்தை பிடித்த ஜோடி 26.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 1992-ம் ஆண்டு ஸ்ருதியின் பெற்றோர்கள் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பிலடெல்பியாவின் (Philadelphia) ஜனநாயக தேசிய மாநாட்டில் மிகக்குறைந்த வயது பிரதிநிதியாக ஸ்ருதி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: