சிகிச்சை பெறுவது குறித்து ஜெயலலிதா ரகசியம் காக்க விரும்பினாரா? டாக்டர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெளியில் யாருக்கும் தெரியாத வகையில் ரகசியம் காக்க விரும்பினாரா என்பது குறித்து டாக்டர்கள் ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் நேற்று காலை 10.30 மணியளவில், அப்போலோ மருத்துவமனை மகப்பேறு இயல் டாக்டர் சுமனா மனோகர், இதய சிகிச்சை பிரிவு டாக்டர் சாமுவேல் ஆகியோர் நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர் மதுரை எஸ்.பார்த்தசாரதி விசாரணை நடத்தினார். பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் குறுக்கு விசாரணை செய்தார்.

இந்த விசாரணைக்கு பிறகு ராஜா செந்தூர்பாண்டியன் கூறும் போது, டாக்டர் சுமனா மனோகர் தன் வாக்குமூலத்தில் 29.9.2016ல் இருந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தேன். ஜெயலலிதா தன் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயத்தில் ரகசியம் பாதுகாக்கப்பபட வேண்டும் என்று அக்கறை ெகாண்டிருந்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றார்.இதய சிகிச்சை பிரிவு டாக்டர் சாமுவேல் கூறும் போது, ஜெயலலிதா உடல் நிலையில் உள்ள பல்வேறு பிரச்னையின் வெளிப்பாடாக தான் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடம் நான், சசிகலா தரப்பில் இருந்து 25.11.2016ல் வெளிநாட்டில் இருந்து இதய சிகிச்சை நிபுணரை வரவழைத்து இருந்தனர்.

அந்த டாக்டர் கூட இப்போது ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்வதாக கூறினார். ஆனால், அப்போலோ இப்போதைக்கு ஆஞ்சியோ ேதவையில்லை என்று கூறியதே அது சரிதானா என்று கேட்டேன். அதற்கு சரி தான்.  அந்த நேரத்தில் அவருக்கு ஆஞ்சியோ செய்ய தேவையில்லை என்று அப்போலோ இதய சிகிச்சை பிரிவு டாக்டர்கள் முடிவு செய்தனர் என்று கூறினார். 4.12.2016ல் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட்டிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் கூறினார்.

4.12.2016 மாலை 4.20 மணி வரை ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என்று டாக்டர்கள் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தனர். இதய வால்வில் ஏற்பட்ட வளர்ச்சியும் திடீரென ஏற்பட்டது தான் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினர்.

டாக்டரை சந்திக்க மறுத்த ஜெயலலிதா இதுகுறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:

இதய சிகிச்சை பிரிவு டாக்டர் சாமுவேல் கூறும் போது, 25.10.2016 ஜெயலலிதாவை பார்க்க சென்றேன். ஆனால், ஜெயலலிதா பார்க்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். அந்த நேரத்தில் என்னை ஆஞ்சியோ செய்யலாமா, வேண்டாமா என்பதை பார்க்க தான் அழைத்தனர். ஆனால், ஜெயலலிதா பார்க்க விரும்பவில்லை. இதையடுத்து அவரது மருத்துவ அறிக்கையை பார்த்து நான் ஆஞ்சியோ செய்ய தேவையில்லை என்று கூறினேன். அதன்பிறகு என்னை அழைக்கவில்லை.

இதய வால்வில் 14 மிமீ ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் வால்வு செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டு, அதனால், இதயத்தில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த வால்வில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஆஞ்சியோ செய்தால் தான், அந்த வளர்ச்சியை அகற்றவா, வேண்டாமா என்பதை கண்டறிய முடியும். அதற்கு நோயாளியை நேரடியாக பார்க்க வேண்டும் என்று கூறினார். மகப்பேறு இயல் டாக்டர் சுமனா மனோகர் கூறும் போது, ஜெயலலிதாவின் அந்தரங்க விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதனால், ஆணையத்தின் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும், இந்த டாக்டரின் வாக்குமூலம் நகல்கள் கூட வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: