சுஷ்மா சுவராஜ் திடீர் முடிவு அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை : பாஜ தலைமைக்கு தகவல் அனுப்பினார்

புதுடெல்லி : ‘‘எனது உடல்நலனை கருத்தில் கொண்டு, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர் சுஷ்மா சுவராஜ் (66). மிக முக்கிய பொறுப்பான வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இவர் திறம்பட செயல்பட்டு பாராட்டும் பெற்று வருகிறார். வெள்ளம், இயற்கை பேரிடர், அவசரகாலங்கள், கடத்தல் போன்றவற்றில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை பல்வேறு வழிகளில் முயன்று, தாய்நாட்டுக்கு அழைத்து வரச் செய்து பெயர் பெற்றார். இந்நிலையில், அவருக்கு 2016ல் சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து அவர் பொது நிகழ்ச்சியில் அவ்வளவாக தலைக்காட்டவில்லை. சுஷ்மா, மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அங்கு, தொகுதி எம்பி.யை காணவில்லை என்று கூட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தற்போது அம்மாநிலத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தூரில் பிரசாரத்துக்கு இடையே நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘என் உடல்நிலை ஒத்துழைக்காததால், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இது குறித்து கட்சியின் மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர்கள் என் முடிவு குறித்து தீர்மானிப்பார்கள்’’ என்றார். சுஷ்மாவின் ஆணித்தரமான வாதங்களை வாஜ்பாயே பாராட்டியுள்ளார். இதனால் அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவரை மாநிலங்களவை எம்.பி.யாக்கி, அதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு பாஜ அழைத்து வரும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சுஷ்மா திடீரென தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது பாஜ.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: