பொதுப்பணித்துறை எழுதிய கடிதம் எதிரொலி தமிழகத்துக்கு தண்ணீர் தருவதாக ஆந்திரா உறுதி: கண்டலேறு அணையில் இருந்து விரைவில் விடுவிப்பு

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. அதற்கு தண்ணீர் தருவதாக ஆந்திர அரசு உறுதியளித்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய 4 ஏரிகள் விளங்குகிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து தான் சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மூலம் தண்ணீரும், மேலும், தெலுங்கு கங்கை திட்டம் மூலம், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. அதன்படி இந்த ஒப்பந்த காலத்தில் 8 டிஎம்சி நீர் தர வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். இதையேற்று, ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. இந்த நிலையில் 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 13 டிஎம்சியாக நீர் இருப்பு குறைந்துள்ளதால் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.

ஆந்திரா சார்பில் 1.59 டிஎம்சி மட்டுமே தரப்பட்டது. இந்த நிலையில், நான்கு ஏரிகளை நம்பி தான் சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. 4 ஏரிகளின் நீர் மட்டம் 1.6 டிஎம்சியாக உள்ளது. தற்போது ஏரியில் இருக்கும் நீர் மட்டத்தை வைத்து 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் திறந்து விடக்கோரி சில தினங்களுக்கு ஆந்திரா பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் ஆந்திரா சார்பில் கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், ஆந்திர பாசனத்திற்கு கூட தண்ணீர் திறக்கப்படவில்லை. குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைகளுக்கு நீர்வரத்து வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் கூறியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: