கஜா புயல் தாக்கம் எதிரொலி : தமிழகத்தில் 28 பேர் பரிதாப பலி

சென்னை : கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்தது. இதற்கிடையே கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கஜா புயலில் சிக்கி 216 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கஜா புயல் தாக்கம் எதிரொலி : 28 பேர் உயிரிழப்பு

கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

1. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.  பட்டுக்கோட்டை சிவகொள்ளையில் பலவீனமான நிலையில் இருந்த வீடு புயல், மழையால் இடிந்து விழுந்ததில் தினேஷ், ரமேஷ், சதீஷ், அய்யாதுரை ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

2. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் அய்யாமாள் என்பவர் உயிரிழந்தார்.

3. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார்.

4. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனமழையால் சுவர் இடிந்ததில் சிறுமி பிரியாமணி உயிரிழந்தார்.

5. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை திராவிட மணி உயிரிழந்தார்.

6. சிவகங்கை மாவட்டம் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முத்துமுருகன் என்பவர் உயிரிழந்தார்.

7.கஜா புயல் காரணமாக திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்ததில் குடவாசல் பகுதியில் ராமகிருஷ்ணன், கோவில்வெண்ணி பகுதியில் கனகவள்ளி ஆகிய 2 பேர் உயிரிழந்தார்.

8. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் மின்னல் தாக்கி பேபி அம்மாள்(75) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

9. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பலத்த சூறைக்காற்றால் மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். பேரூராட்சி சுய உதவிக் குழு பணியாளராக பணிபுரிந்து வந்த எலிசபெத் சாலையில் நடந்து சென்ற போது மரம் விழுந்தது.

10. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மரம் விழுந்து ரங்கநாதன் என்பவர் பலியானார்.

11. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மறவப்பட்டியில் சுவர் இடிந்து விழுந்து சின்னாத்தாள்(60) என்பவர் உயிரிழந்தார்.

12. புதுக்கோட்டை மாவட்டம் பரனூரில் ஆறுமுகம், மங்களநாட்டில் காசிநாதன் உயிரிழந்தார்.

13.புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இடிந்து மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலங்குடியில் ரெங்கசாமி மற்றும் புதுக்கோட்டையில் மேகலா என்ற 6 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். அன்னவாசலில் சீதாயி (63),விராலிமலையில் ஈஸ்வரி (24), ரெத்தினக்கோட்டையில் பொன்னம்மாள் (50) ஆகியோரும் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

14.கஜா புயல் காரணமாக கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் நீலிமா என்ற பெண் உயிரிழந்தார். காரில் சிக்கிய ஒரு ஆணும், குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் காரில் சென்ற போது மரம் விழுந்திருக்கிறது.

15.மன்னார்குடி அருகே பைங்காட்டூரில் புயல் தாக்கத்தால் சுவர் இடிந்து விழுந்து பானுமதி என்ற பெண் உயிரிழந்தார்.

16. வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். வேதாரண்யத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சுப்பையா, வடுகநாதன் மற்றும் பாப்பு ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: