இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்களிடையே திடீர் மோதல்

இலங்கை: இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக எம்பிக்கல் மீது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி அளவில் இலங்கை பாராளுமன்ற அமர்வு தொடங்கியது. இலங்கையில் நாடாளுமன்றம் கலைப்புக்கு கோர்ட் தடை விதித்ததுடன் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இன்று 2 வது நாளாக கூடிய பார்லி.,யில் ராஜபக்சே பேச துவங்கினார். இவரது உரைக்கு அனுமதி வழங்க கூடாது என ரணில் எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இருப்பினும் ராஜபக்சே தொடர்ந்து உரயைாற்றி கொண்டிருந்தார்.

அவர்கள் உரையாற்றும் போது பதவி எனக்கு பெரிதல்ல.  ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிடப்பட்ட சதி ஆதாரப்பூர்வமாக  தமக்கு கிடைத்ததையடுத்து. அரசை கழிப்பதற்காக முன்வந்தோம். நான் நாட்டை நேசிப்பதால் நாட்டை காப்பாற்ற அந்த பொறுப்பை ஏற்றேன் என ராஜபக்சே உரையாற்றினார்.

சிறிசேனாவுக்கு எதிராகவும் ரணில் கட்சியின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து எம்.பி.,க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை அருகே சென்ற எம்.பி.,க்கள் அவரை முற்றுகையிட்டு குரல் எழுப்பினர். சில எம்.பி.,க்கள் லேசான கைகலப்பில் ஈடுபட்டனர். சிலர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. எம்.பி.,க்கள் மோதல் சம்பவத்தால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகர், மகிந்தா ராஜபக்சே, ரணில் ஆகியோர் அவையில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: