சபரிமலை விவகாரத்தை பற்றி ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் அழைப்பு

திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரத்தை பற்றி ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். சபரிமலை விவகாரத்தை பா.ஜ., அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்குவதாகவும் நவம்பர் 9-ம் தேதி பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருந்தார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நவ 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22-ம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர உள்ளது. இதனால் மண்டல பூஜைகாக நடைதிறப்பதற்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்து . இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: