அதிமுக தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது மறைந்த ஜெ.,-வின் புதிய சிலை

சென்னை: சென்னை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் புதிய சிலையை இன்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறந்துவைத்தனர். கடந்த 2016 டிசம்பர் 5-ல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மரணமடைந்தார். அவரது 70-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. 7 அடி உயரத்தில் திறக்கப்பட்ட இச்சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதா சிலையை மாற்றியமைக்க  முடிவு செய்தது.

இதனையடுத்து ஜெயலலிதாவின் புதிய சிலையை வடிவமைக்கும் பணி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது. 8 அடி உயரம், 800 கிலோ எடையில் வெண்கலத்தினாலான ஜெயலலிதா சிலையை அவர் தத்ரூபமாக வடிவமைத்தார். இந்த சிலை கடந்த மாதம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கடும் விமர்சனத்திற்குள்ளான ஜெயலலிதாவின் பழைய சிலை அகற்றப்பட்டு, புதிதாக பீடம் அமைத்து புதிய சிலை அதில் நிறுவப்பட்டது.  இன்று காலை 9.30 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் புதிய சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: