சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி குலுவாடி ரமேசுக்கு வழியனுப்பு விழா

சென்னை: மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட  சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேசுக்கு உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் கடந்த 2016 ஏப்ரல் 14ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். கடந்த 2 ஆண்டுகள் 7 மாதங்களாக பதவி வகித்து வந்தார்.  இந்நிலையில், இவரை மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார். அதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு பிறப்பித்தது. இதையடுத்து, வரும் 22ம் தேதிக்குள் நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க வேண்டும். இந்நிலையில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தலைமைக் குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பார் அசோசியேசன் செயலாளர் கமலநாதன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி வி.நளினி, வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், லா அசோசியேசன் முன்னாள் தலைவர் எம்.கே.விஜயராகவன் மற்றும் மூத்த வக்கீல்கள், பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.

 விழாவில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பேசும்போது, உயர் நீதிமன்றங்களில் 62,000 வழக்குகளை முடித்துள்ளார்.

பெரும்பாலும் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்தவுடனேயே தீர்ப்பை வாசிப்பவர் என்றார். இதையடுத்து, நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் பேசும்போது, இந்த நீதிமன்றத்தை விட்டு செல்வது வேதனை அளித்தாலும் பசுமையான நினைவுகளுடன் செல்கிறேன் என்றார். குலுவாடி ஜி.ரமேஷ் இடமாற்றம் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக குறைந்து, காலியிடம் 14 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோதாரி இன்னும் ஒரு வாரத்திற்குள் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: