தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி!

தருமபுரி : தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி முருகம்மாள், இவர்களது மகள் தமிழ்செல்வி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் இன்று காலை தனது மகள் தமிழ்செல்வியுடன் வந்து தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த இரண்டு போலீசார் அவரை தடுத்தி நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையின்போது, எனது மனைவி முருகம்மாள் மகன் முறையுள்ள 19 வயதுள்ள வாலிபருடன் ஓடிவிட்டார். மேலும் வீட்டில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார். எனவே அவர்கள் 2 பேரையும் போலீசார் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் கள்ளத்தொடர்பு தப்பில்லை என்று கூறிய உத்தரவால், நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும், எனது மனைவியை போலீசார் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: