தென் அமெரிக்காவில் நடந்த உலக யோகா போட்டியில் சீர்காழி மாணவி முதலிடம்

சீர்காழி: உலக அளவில் அமெக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில் சீர்காழி மாணவி முத லிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாகை மாவட்டம், சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன்சீத்தா தம்பதியரின் மகள் சுபானு (15). இவர் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சுபானு யோகா மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து சீர்காழி பகுதியில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்து வந்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட, மாநில, இந்திய அளவில் நடைபெற்ற யோகா போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். இந்நிலையில் சுபானு தென் அமெரிக்காவில் உள்ள ரோசாரியோவில் நடந்த உலக அளவிலான யோகா போட்டியில் 1215 வயதிற்கான பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவி சுபானுவையும், ஊக்குவித்த தாய் சீத்தா, தந்தை மணிவண்ணன் ஆகியோரை சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: