சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் : நடைப்பந்தல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டு போராட்டம்

திருவனந்தபுரம் : சபரிமலை கோயிலுக்கு வந்த 50 வயதுக்கு மேற்பட்ட 3 பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அடையாள அட்டை காண்பித்த பிறகே 3 பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே இளம் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஊருக்கு திரும்பிச்சென்றனர். மேலும் கோயிலுக்கு செல்ல பெண் பதித்திரிகையாளர் ஒருவர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சபரிமலை நடைப்பந்தல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  50 வயதுக்கு கீழ் உள்ள பெண் ஒருவர் தரிசனத்துக்கு வந்ததாகக் கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அம்ரிதா தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பிஜூ காயமடைந்தார்.

சபரிமலையில்  பெரும் பதற்றத்துக்கு இடையே வரலாற்றில் முதன் முறையாக சன்னிதானத்தில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  சபரிமலையில் 2 ஏடிஜிபிக்கள், 3 ஐஜிக்கள் தலைமையில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பட்டாலியன் கமாண்டோ  வீரர்களும், அதிவேக அதிரடிப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: