திமுக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூடுதலாக நியமனம் 5 பேரை நீக்கி தலைமைக்கழகம் அறிவிப்பு

சென்னை: திமுகவில் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் 17 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் மாற்றப்பட்டு புதிதாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு சமீபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாடாளுமன்ற தொகுதிக்கு 2 பொறுப்பாளர்கள் வீதம் தமிழகம், புதுவை என்று 40 தொகுதிகளுக்கு 80 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்திற்கு 17 பேர் கூடுதலாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை வடக்கு தொகுதிக்கு பாலவாக்கம் சோமு, மத்திய சென்னைக்கு இ.ஏ.பி.சிவாஜி, காஞ்சிபுரம் மீ.அ.வைத்தியலிங்கம், அரக்கோணம் முகமது சகி, பா.அருண்குமார், கிருஷ்ணகிரி திருவிடைமருதூர் செ.ராமலிங்கம், தருமபுரி பார்.இளங்கோவன், ஆர்.தமிழ்மணி, சேலம் திருச்செங்கோடு கந்தசாமி, திருப்பூர் மு.பாண்டியராஜ், பொள்ளாச்சி பெ.குழந்தைவேலு, பெரம்பலூர் வேளச்சேரி மணிமாறன், நாகப்பட்டினம் கிரகம்பெல், ராமநாதபுரம் அ.சுப்பிரமணியன், இல.மேகநாதன், தென்காசி குழந்தை தமிழரசன், திருநெல்வேலி எம்.ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர நீலகிரி, கடலூர், கோவை, மயிலாடுதுறையில் பொறுப்பாளர்கள் சிலர் நீக்கப்பட்டு, நீலகிரிக்கு வக்கீல் சரவணன், கடலூர் எம்.அப்பாவு, கோவை பரணி கே.மணி, மயிலாடுதுறை கடலூர் இள.புகழேந்தி, கோவை.வீரகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: