ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கினால் அமைதியை பாதுகாக்க முடியும் : யோகி ஆதித்யநாத்

லக்னோ: அயோத்தியில் ராம ஜென்மபூமி மற்றும் பாபர் மசூதி பிரச்சனை தொடர்பான தீர்ப்பு தாமதிக்கப்பட்டால் மக்கள் மத்தியில் சீற்றம் எழும் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அயோத்தி விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது தான் நிதர்சனம்.

தாம் அரசியல் சாசன பதவி வகிப்பதால் இவ்விகாரத்தில் தலையிட முடியாது. உரிய நேரத்தில் அளிக்கப்படாமல் தீர்ப்பு கிடைக்க தாமதம் நேர்ந்தால் மக்கள் மத்தியில் சீற்றம் எழுவது இயல்பானது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தீர்ப்பு விரைந்து வழங்கப்பட்டால் தான் அமைதியையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க முடியும். வழக்கை விரைந்து விசாரணை நடத்துவதன் மூலமே உடனடியாக தீர்வு காண முடியும். அயோத்தி மத நம்பிக்கை, சமாதானம் தொடர்பான விவகாரம் என்பதால் இதில் அரசியல் வழியிலான தீர்வை விட நீதிமன்றமே தீர்ப்பு அளிப்பதுதான் சிறந்தது என ஆதித்யநாத் கூறினார். பெரும்பான்மையான மக்களின் அமைதி, சகோதரத்துவம், நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என தாம் நம்புவதாகவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: