ஈரோடு: பர்கூர் மலை எருமைகள் புதிய கால்நடை இனமாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கிராமங்களில் வளர்க்கப்படும் எருமைகள் தனித்துவம் கொண்டவை. இந்த எருமைகள் 4 அடி உயரம் மட்டுமே வளரும் சிறிய வகையாகும். இதன் எடை சராசரியாக 150 முதல் 250 கிலோ வரை இருக்கும். நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் முதல் 2 லிட்டர் வரை பால் கறக்கும். இந்நிலையில், நடப்பாண்டுக்காண புதிய கால்நடை இன அங்கீகார கூட்டம் அரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் பர்கூர் மலை எருமைகளை, புதிய வகை எருமையாக அங்கீகரித்தனர். மேலும் உலக அளவில் பர்கூர் எருமையின் குறியீடு எண்ணையும் 01015 என்று அறிவித்தனர்.