கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் : பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்மமரணம்

சண்டிகர் : ஜலந்தர் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் குரியகோஸ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் இறந்த நிலையில் பாதிரியார் உடல் மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கேரள கோர்ட்டில் பிராங்கோ மீது வழக்கு தொடரப்பட்டது. பிஷப் பிராங்கோ கேரளத்தில் பணியாற்றிய போது தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக  கன்னியாஸ்திரி ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து  பிஷப் பிராங்கோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கேரள காவல்துறையினரின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பிராங்கோ தற்போது பிணையில் வெளிவந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளார்.பிஷப் பிராங்கோ மீது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தெரிவிப்பதற்கு உதவியதாக கூறப்பட்டவர் பாதிரியார் குரியகோஸ் ஆவார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த அவர், பிஷப் பிராங்கோவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் பலர் தன்னிடம் புகார் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதனால் தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் பாதிரியார் குரியகோஸ்  கூறினார். இந்த நிலையில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அன்னை மேரி தேவாலயத்தில் தனது அறையில் பாதிரியார் குரியகோஸ் இறந்து கிடந்தார். பிஷப் பிராங்கோவுக்கு எதிரான முக்கிய சாட்சியம் என்பதால்  பாதிரியார் குரியகோஸ் கொல்லப்பட்டு இருக்கலாம் என அவரின் சகோதரர் ஜோஸ் கூறியுள்ளார்.தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தன்னிடம் தனது சகோதரர் தெரிவித்ததாகவும் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: