வெளிநாடுகளுக்கு சென்றாலும் அங்கிருந்து வீட்டை கண்காணிக்கலாம்.. கேமரா வைப்பதை செலவாக நினைக்க வேண்டாம் போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

பூந்தமல்லி: சிசிடிவி கேமரா வைப்பதை செல்வாக மக்கள் நினைக்க வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை போரூர் மங்களா நகர் பகுதியில் உள்ள 13 தெருக்களில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட 54 கேமராக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டீகாராமன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்காணிப்பு கேமரா குறித்து நடத்திய கலை நிகழ்ச்சிகள் மற்றும் வில்லுப்பாட்டும் நடந்தது. கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் ஈஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில்,  ‘‘சென்னை பெருநகரத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமரா திறக்கும் நிகழ்ச்சியில் முதன் முதலாக கலந்து கொண்டுள்ளேன். இதற்காக பெருமைபடுகிறேன். கண்காணிப்பு கேமராவின் முக்கியத்துவத்தை போலீசார் அறிவுறுத்தி இருப்பார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும். குற்ற சம்பவங்கள் பல்வேறு வகையில் மாறி விட்டது. செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்களில் மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் கூட தற்போது ஈடுபட தொடங்கிவிட்டனர்.

வெளி மாநிலத்தில் இருந்து விமானத்தில் வந்து குற்ற செயல்களில் 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். இதனை குறைக்க கண்காணிப்பு கேமராக்கள் தீர்வாக இருக்கும் என்று நம்பி மூன்றாவது கண் என்னும் கண்காணிப்பு கேமராவை பொறுத்தும் பணியில் இறங்கினோம். இது குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஒவ்வொரு வீட்டிலும் வைக்க வேண்டும். இதனை செலவாக நினைக்க வேண்டாம். மூலதனமாக வைத்துக்கொள்ளுங்கள். பல லட்சம் செலவில் வீட்டை கட்டி விட்டு வெளி நாடுகளுக்கு சென்றாலும் அங்கிருந்து வீட்டை கண்காணிக்கலாம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: