அணைக்கரை செக்போஸ்டில் விதிகளைமீறி வந்த எஸ்பி காரை மறித்த போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்: தஞ்சை எஸ்பி உத்தரவு

கும்பகோணம்: கோவை எஸ்.பி.யாக இருந்தவர் மூர்த்தி. இவர் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக  மாற்றப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை  எஸ்.பி. மூர்த்தி, மயிலாடுதுறை செல்வதற்காக தனது மனைவி மற்றும் உறவினர்களுடன்  காரில் அணைக்கரை  வந்து கொண்டிருந்தார். அப்போது எஸ்பி  கார், முன்புறம் சென்ற வாகனத்தை முந்த முயன்றது.  இதனை கவனித்த  அணைக்கரை செக்போஸ்ட்டில் இருந்த நாடிமுத்து என்ற போலீஸ்காரர், எஸ்பியின் கார் என்று தெரியாததால், அந்த காரை மறித்தார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்பி மற்றும் உறவினர்கள், காரை மறித்த போலீஸ்காரர் நாடிமுத்துவை, தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. அப்போது சீருடை அணியாமல் இருந்த  நாடிமுத்து உடனடியாக போலீஸ் உடையணிந்து வந்தார்.

மேலும் இரு தரப்பினரிடையே வார்த்தை முற்றியதால், ஆத்திரமடைந்த மூர்த்தி, தஞ்சை எஸ்பி செந்தில்குமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நாடிமுத்து  எஸ்பியாக இருந்தால் என்ன? யாரிடம் வேண்டுமானாலும்  பேசு என கூறியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த மூர்த்தி, தஞ்சை எஸ்பி செந்தில்குமாருக்கு தகவல் அளித்தார். இந்நிலையில் நாடிமுத்து தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். போக்குவரத்து விதிகளை மீறி வந்த வாகனத்தை, மறித்ததற்காக, தன்னை ஆயுதப்படைக்கு மாற்றியதால், ஆத்திரமடைந்த நாடிமுத்து, தனது  செல்போனில் இந்த வீடியோ பதிவை வலை தளத்தில் வெளியிட்டார். இச்சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: