தகவலை பார்த்து போலீஸ் தாமாக விசாரிக்க அதிகாரம் உண்டு: சக்திவேல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

திருத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை தவறாக எண்ணத்தோடு பார்ப்பது, பெண்ணை சீண்டுவது, உடல் பாகங்களை பற்றி பேசுவது கூட தண்டனைக்கு உரிய குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எத்தனை ஆண்டு காலம் கழித்து வேண்டுமானாலும் சொல்லலாம். அதில், எந்த தவறும் கிடையாது. ஒருவர் தனது ஆளுமை, செல்வாக்கை பயன்படுத்தி ஒரு பெண்ணை தவறான முறையில் அணுகும் போது, அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறைந்த போது தான் வெளியில் சொல்ல முடியும். அப்படி ஒரு சூழ்நிலையில், இப்போது, எத்தனை ஆண்டுகள் கழித்து அந்த பெண் வெளியில் அந்த விவகாரம் குறித்து பேசுகிறார் என்று பார்க்க கூடாது. அந்த பெண் சொல்வதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்றே பார்க்க வேண்டும். மீ டு இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட பெண் சொல்லும் குற்றச்சாட்டு, தண்டனைக்கு உரிய செயலாக இருந்தாலும்  தவறு செய்தவருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் சொல்லவில்லை; புகார் தரவில்லை. தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை தான் வெளியில் சொல்கிறார்.

 

கடந்த காலங்களில் பாலியல் தொந்தரவு மூடி மறைக்கிற அளவுக்கு தான் இருந்தது. இப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை ெவளியில் சொல்லும் அளவுக்கு காலம் மாறி விட்டது. இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், காலம் கடந்து சொன்னாலும், அரசு தன்னிச்சையாக வழக்காக எடுத்து நடவடிக்கை எடுக்கலாம். மீ டு விவகாரம் தொடர்பாக தானாக வந்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது. ஆனால், காவல்துறை தானாக வந்து விசாரிக்கலாம். இது ஒரு குற்றச்செயல். எனவே, இந்த குற்றச்செயலை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவல்துறைக்கு கடமையும் உள்ளது. மீ டு இயக்கம் மூலம் தவறான கருத்தை ஒரு பெண் சொல்லியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். புகழுக்காகவோ, விளம்பரத்திற்காகவோ சிலர் நடக்காததை சொல்கிறார்கள் என்று விசாரணையில் தெரிய வந்தால் அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். இந்திய தண்டனை சட்டத்தில் சந்தர்ப்பவாத சாட்சியம் என்று ஒன்று உள்ளது. ஒரு செயலை இவர் தான் செய்தார் என்று சொல்லும் போது, அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தை பார்க்க வேண்டும்.

சந்தர்ப்ப சாட்சியம் அடிப்படையில் உண்மையை நிரூபிக்க முடியும். ஒரு ஆண், ஒரு பெண் மட்டுமே இருக்கும் இடத்தில் பாலியல் தொந்தரவு குறித்து புகார் வந்தால் அந்த சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்படும். அதாவது ஒரு அலுவலகத்தில் அனைத்து பெண் ஊழியர்களையும் போக சொல்லி விட்டு ஒரு பெண்ணை மட்டுமே வேலை செய்ய சொல்கிறார்கள் என்று எடுத்து கொள்வோம். அந்த பெண் அந்த நேரத்தில் உயர் அதிகாரி பாலியல் தொந்தரவு செய்தார் என்று 15 வருடம் கழித்து புகார் தருகிறார். அந்த சந்தர்ப்பத்தை வைத்து பார்க்கும் போது பாதிக்கப்பட்ட பெண் கூறியது உண்மையா, இல்லையா என்பதை பார்க்க முடியும். சந்தர்ப்பவாத சாட்சியத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் குற்றவியல் நடைமுறையில் உள்ளது. தண்டனைக்கு உரிய குற்றத்தை சந்தர்ப்பவாத சாட்சியம் மூலம் நிரூபணம் செய்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம்.

புகழுக்காக, விளம்பரத்திற்காகவோ சிலர் நடக்காததை சொல்கிறார்கள் என்று விசாரணையில் தெரிய வந்தால் அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: