மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 326 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள்போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 அளவில் தொடங்கியது.  இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சந்திரபால் ஹேம்ராஜ் மற்றும் கெரோன் போவல் களமிறங்கினர். இதில் சந்திரபால் ஹேம்ராஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 78 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹோல்டர் 38 ரன்கள்  எடுத்தார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.

323 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தவான் வந்த வேகத்தில் திரும்பினார். 4 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து நின்று விளையாடிய விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அதிரடியை காட்டினர். விராட் கோலி 32.6 வது ஓவரில் 140 ரன்களில் வெளியேறினார். ரோகித் ஷர்மா 117 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி வெற்றது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: