பின்னலாடை நிறுவனங்களில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய 2 குழு: திருநாவுக்கரசர் அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படுகின்ற நூற்பாலைகள், பின்னலாடைகளை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளம் பெண்கள், திருமணமாகாத பெண்கள், தாய்மார்கள் ஆகியோருக்கு இழைக்கப்படுகிற அநீதி மற்றும் கொடுமைகள் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகளை கண்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கவலை தெரிவித்து தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். எனவே அதை கண்டறிய திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக காங்கிரஸ் துணை தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.என்.கந்தசாமி தலைமையில் கன்வீனராக அமைப்பு சாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் தமிழக தலைவர் வி.மகேஸ்வரன்,

இணை கன்வீனராக  காங்கிரஸ் தொழிற்சங்க மாநில பொது செயலாளர் ஜெ.ரகுநாதன், ஒருங்கிணைப்பாளராக எம்.கிருஷ்ணன், சி.எம்.பொன்னுசாமியும், உறுப்பினர்களாக அந்தந்த மாவட்ட தலைவர்களும் பணியாற்றுவார்கள். விருதுநகர் மாவட்டத்திற்கு முன்னாள் எம்பி எஸ்.எஸ்.ராமசுப்பு தலைமையில் கன்வீனராக அமைப்பு சாரா தொழிலாளர்கள் காங்கிரஸ் தலைவர் வி.மகேஸ்வரன், இணை கன்வீனராக தொழிற்சங்க மாநில பொது செயலாளர் ஜெ.ரகுநாதன், ஒருங்கிணைப்பாளராக பி.இ.ஜெயராமு, ஆமோஸ், உறுப்பினராக அந்தந்த மாவட்ட தலைவர்கள் செயல்படுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: