சிபிஐ அதிகாரியாக நடித்து வழிப்பறி பணி நீக்கத்தை எதிர்த்து போலீஸ்காரர் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: சிபிஐ அதிகாரியாக நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து ெசய்யக்கோரி தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர் பரமசிவம். இவர், கடந்த 2002 மே 13ம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸ்காரர்களுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பணி நீக்கம் சரிதான் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கு நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் சிபிஐ போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும், குற்ற விசாரணைக்கும் வித்தியாசம் உண்டு. அவர் குற்றம் செய்ததை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். தனி நீதிபதியின் இந்த உத்தரவில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.  எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: