சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல: திருமாவளவன் பேட்டி

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கிவரும் யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலைகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போராட்டம் நடத்தினார். இதனையடுத்து செய்தியாளரிடம் கூறியதாவது; யமஹா, ராயல் என்பீல்டு தொழிற்சாலை ஊழியர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு தொடர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டம்  நியாமானது, ஜனநாயக பூர்வமானது.  23ம் தேதி ஒரகடத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை ஊழியர்கள் நீதிகேட்டு நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்.சபரிமலை விவகாரத்தில் மதமா? ஜாதியா? என்பது பிரச்னை இல்லை. ஆணா, பெண்ணா, என்பது தான் பிரச்னை. பாலின சமத்துவம் தொடர்பாக தான் வழக்கு தொடரப்பட்டது.

ஆகவே எந்த பெண், எந்த மதம், சாதியை என்று பார்க்காமல், எந்த அமைப்பு, எந்த சங்கம் என்றெல்லாம் பார்க்காமல், ஒரு பெண் சபரிமலைக்கு வர வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும் என்று  விரும்பினால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கடமை. நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவது தான் அரசின் கடமை. ஆனால் ஒரு சில பெண்களை சமூக அமைப்பை சார்ந்தவர் என கூறி அவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது கேரளா அரசு. இது ஏற்புடையதல்ல. அப்படி என்றால் பெண்களை எதிர்த்து போராடி வரக்கூடியவர்கள், பெண்களை தாக்க முயற்சி செய்பவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள்  ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்பை சார்ந்தவர்கள்தான். வழிபாடு செய்ய வேண்டும் என்று கோருவது உரிமை. அதுமட்டும் தான் அந்த இடத்தில் பார்க்க வேண்டுமே தவிர இவர்கள் பக்தர்களா, இல்லையா, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களா என்று பார்ப்பதற்கு இங்கு எந்த முகாந்திரமும் இல்லை. இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: