தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்: துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு

சென்னை: தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கும், தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை நலத்திற்கும் அரசு தொடர்ந்து  பாடுபடும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். உலக தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக “தமிழியக்கம்” என்ற அமைப்பு தொடங்கும் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழியக்கத்தின் நிறுவன தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கருமுத்து தி.கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ேபசியதாவது:தமிழை ஒரு மொழி என்று நினையாமல், அதனை தங்கள் உயிர் எனக்  கருதியவர்கள். தமிழக மக்கள். தமிழ் மக்கள் தங்கள் உயிரெனப் போற்றிய அன்னைத்  தமிழ் மொழி என்றும் தழைத்தோங்க வேண்டும்.  தமிழுக்கும்,  உலகத் தமிழின முன்னேற்றத்திற்கும் தொண்டாற்ற முனைந்திருக்கும்  ‘தமிழியக்கம்’ அமைப்புக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும்.  இந்நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த அரசு  என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றார். இதில் பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக  பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டாக்டர் அக்பர் கவுசர், புதிய தமிழகம்  கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: