ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு: சிறப்பு குழுவுக்கு ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு நடத்த, சிறப்புக் குழுவுக்கு கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதையடுத்து ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மேகாலயா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் சிறப்பு குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த மாதம் 23ம் தேதி ஆலையை ஆய்வு செய்தது. ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வாய் மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 30க்குள் முடியும் நிலையில், ஆய்வுப்பணி முடிவடையாததால் கூடுதல் அவகாசம் கோரி சிறப்புக் குழு சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நேற்று பரிசீலித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏ.கே.கோயல், சிறப்பு ஆய்வுக் குழுவிற்கு நவம்பர் 30ம் தேதிவரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: