மாதம்தோறும் ரூ.4 கோடி நிதி ஒதுக்கியும் நீர்வளத்துறை மேம்பாட்டு குழு மத்திய அரசிடம் நிதியை பெற நடவடிக்கை எடுக்கவில்லை

சென்னை: நீர்வளத்துறை மேம்பாட்டு குழு அமைத்து 4 மாதங்களாகியும் மத்திய அரசிடம் நிதியை பெற நடவடிக்கை இல்லை. இக்குழுவிற்காக மாதம் ரூ.4 கோடி ஒதுக்கிய நிதி வீண் என்று அத்துறையின் நேர்மையான ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளத்துறை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள புதிய குழு  ஒன்று கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமை பொறியாளர் ராஜகோபால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில் இனி வரும்காலத்தில் திட்ட அறிக்ைக தயாரித்து நிதி பெற நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், 5 மாதங்களாகியும் தற்போது வரை இக்குழு எந்த வேலையும் செய்யவில்லை. இக்குழு சார்பில் தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசிடம் ஒரு அறிக்கை கூட தயாரித்து நிதி கேட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், இக்குழுவிற்கு மாதம் ரூ.4 கோடி ஒதுக்கியது வீண் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூறும் போது, ‘நீர்வளத்துறை மேம்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏரிகள் புனரமைப்பு, புதிய ஏரிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி பெறும் என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக அக்குழு சார்பில் திட்ட அறிக்கைகள் கேட்டு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியது. அதன்பேரில் அறிக்கைகளை அந்த குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையை வைத்து, மத்திய அரசிடம் நிதியை பெற அக்குழுவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தற்போது வரை நிறைவேறவில்லை’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: