பிரதமரின் மனதில் விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை, தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம்

டெல்லி; மத்திய பிரதேச மாநிலம் தாடியா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தாம் இதுவரை ஒரே முறை மட்டுமே பிரதமர் அலுவலகம் சென்றதாக குறிப்பிட்டார். அங்கு நேரில் சென்று பிரதமர் மோடியிடம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியதை நினைவு கூர்ந்தார். ஆனால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமரோ, ஏழைகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய கூறிய தமது கோரிக்கையை இறுதி வரை பொருட்படுத்தவேயில்லை என சாடினார்.

பிரதமரின் மனதில் விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு இடமில்லை. நீரவ் மோடி, அனில் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் மனதில் இடமுள்ளது என்றார்.  விவசாயிகளையோ, தொழிலாளர்களையோ அவர் ஒருபோதும் மரியாதைக்குரியவர் என அழைத்ததில்லை. ஏழைகளை அவர் அப்படி அழைத்து யாரும் கேட்டதில்லை. கோட் மற்றும் பூட் போடவில்லை என்றால் அவரை மரியாதைக்குரியவர் என பிரதமர் அழைக்க விரும்ப மாட்டார் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: