×

மேலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மரணம்

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில், கடந்த 1962 வரை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதி இணைந்திருந்தது. 1967ல் மேலூர் தெற்கு மற்றும் மேலூர் வடக்கு என இத்தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில் மேலூர் தெற்கு தொகுதியில் 1967 மற்றும் 1971ல் திமுக சார்பில் மேலூர் அருகே சாணிப்பட்டியை சேர்ந்த ச.பெ.மலைச்சாமி (89) போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு பெற்றார். இதுதவிர, கட்சியில் திமுக மாநில இலக்கிய அணித்தலைவராக பணியாற்றி உள்ளார்.கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், நேற்று காலை காலமானார். அவரது உடல் சாணிப்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உடலுக்கு மதுரை மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இறந்த மலைச்சாமிக்கு பாக்கியலட்சுமி (79) என்ற மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,MLA ,DMK ,constituency ,Melur , The death of the former DMK MLA in Melur district in Madurai district
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...