தன் மீதான அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து முரசொலி செல்வம் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: தன் மீதான அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்த அரசாணை தனக்கு பொருந்தாது என்றும், அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முரசொலி செல்வம் மனுத்தாக்கல் செய்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மீது அதிமுக அரசு 13 அவதூறு வழக்குகளை தொடர்ந்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், தான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் தன்னை எப்படி சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற முடியும். எனவே, தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி முரசொலி செல்வம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரனைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: