சொன்னாரே செஞ்சாரா? தேஞ்சு போயிருச்சு கோவை தெற்கு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, நகரின் மைய பகுதியில் இருக்கிறது. உக்கடம், காந்திபுரம், பூ மார்க்கெட், புலியகுளம், ராமநாதபுரம் என முக்கிய பகுதிகளும், பிரதான ரோடுகளும், அரசு அலுவலகங்களும் அமைந்திருப்பது இந்த தொகுதியில்தான். அவலங்களும், அலட்சியங்களும் அதிகரித்துப்போய் பொதுமக்கள் புலம்பிக் கொண்டிருப்பதும் இந்த தொகுதியில்தான். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் குளங்கள் சீரமைப்பிற்காக இத்தொகுதியில் அதிக பணம் செலவிடப்பட்டது. செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் சீரமைக்க சுமார் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. குளக்கரையில், கலர் கலராக மின்விளக்கு கம்பங்களை மாட்டி, ‘ஐ லவ் கோவை’ என செல்பி ஸ்பார்ட் பொருத்தி, துர்நாற்றத்திற்கு நடுவே மக்களை ஜாலியாக இருக்க வைக்க, நாற்காலி போட்டு வைத்தது மாநகராட்சி நிர்வாகம். அறைகுறையாக உள்ள பணிகளை பல மாதம் முன்பே முதல்வர் துவக்கி வைத்துவிட்டு சென்றது சர்ச்சையை கிளப்பியது.  உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் மார்க்கெட் குப்பை மேடாக இருக்கிறது. தியாகி குமரன் மார்க்கெட் மேம்படுத்தப்படவில்லை. பூ மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டியும், மக்கள் ரோட்டில் உட்கார்ந்துதான் பூ வியாபாரம் செய்கிறார்கள். பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்களை நிறுத்த போதுமான இடமில்லை. உக்கடம் மேம்பால பணியால் பாதி பஸ் ஸ்டாண்ட் மாயமாகிவிட்டது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டும் பரிதாப நிலையில்தான் உள்ளது. இங்குள்ள கழிவறைகள் பல ஆண்டாக மேம்படுத்தப்படவில்லை. மாறாக, தமிழகத்தின் சிறந்த கழிவறை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருப்பதாக சாதனை அறிவிப்பு ஒருபக்கம் தொங்குகிறது. பல இடங்களில் தார்சாலை சீரமைக்கப்படவில்லை. பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. இத்தொகுதியில் அதிக திட்டங்கள் நடந்திருப்பதாக கணக்கு மட்டுமே இருக்கிறது. மக்களின் எந்த கஷ்டமும் தீரவில்லை.க்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையோரம் வசித்த மக்கள், இடம் மாற்றப்பட்டார்கள். உக்கடம் கெம்பட்டி காலனியில் வீடுகள் அகற்றப்பட்டன. புல்லுக்காடு அடுக்குமாடி வீடுகளுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை. 5 மாடி கட்டடங்களில் வசிப்பவர்கள், 20 நாளுக்கு ஒரு முறை கிடைக்கும் குடிநீரை குடத்தில் பிடித்து, மாடி ஏறிச்செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. கழிவுநீர் பண்ணையை சீரமைக்கவில்லை. சுத்திகரிப்பு நிலையம் சுத்தமாக செயல்படவில்லை. குடலை குமட்டும் துர்நாற்றத்துடன் இப்பகுதி மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, செல்கின்றனர். இவர்களுக்கு, எந்த வசதியும் செய்துகொடுக்கவில்லை. பார்வையாளர் கூடம், குடிநீர் வசதி கிடையாது. நோயாளிகளுக்காக எந்த வசதியும் உள்ளூர் எம்எல்ஏ செய்யவில்லை. தொகுதி எல்லைக்குள் உள்ள பெரும்பாலான தானியங்கி சிக்னல்கள் இயங்குவதில்லை. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப, தார்சாலை அகலப்படுத்தப்படவில்லை. சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. கமிஷன் கிடைக்கும் வேலைகளை தவிர வளர்ச்சி பணிகள் வேறு எதுவும் நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சொந்த தொகுதியில் செல்வாக்கு இழந்த காரணத்தால், இத்தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன், பக்கத்தில் உள்ள வடக்கு தொகுதிக்கு தாவி விட்டார்….

The post சொன்னாரே செஞ்சாரா? தேஞ்சு போயிருச்சு கோவை தெற்கு appeared first on Dinakaran.

Related Stories: