புதுடெல்லி: கேரளாவில் வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்காக செஸ் வரி விதிப்பது தொடர்பாக 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் 30வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதுகுறித்து அருண்ஜெட்லி கூறியதாவது: மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை சீர்செய்ய நிதி திரட்டுவதற்காக கூடுதலாக செஸ் வரி வசூலிக்க அனுமதிக்க கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இது ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிசீலிக்கப்பட்டது. இதில், செஸ் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
