ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க தலைவர் தேர்வு

சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் சங்க தலைவராக டி.வி.சோமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் சங்க தலைவராக உள்ள போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் டபிள்யு.சி.டேவிதார் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார்.  இதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் டேவிதார் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர், அதன்படி, ஐஏஎஸ் அதிகாரிகளின் சங்க புதிய தலைவராக டி.வி.சோமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார். துணை தலைவராக முதன்மை செயலாளர் பி.அமுதா, செயலாளராக பங்கஜ்குமார் பன்சால், இணை செயலாளர்களாக எம்.எஸ்.சண்முகம், லட்சுமிபிரியா, பொருளாளராக கிருஷ்ணன் உன்னி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: