உரம் விலை கிடுகிடு நெருக்கடியில் விவசாயிகள்

தஞ்சை: பருவகால மாறுபாடு, போதிய மழையின்மை, கடும் வறட்சி, பெருவெள்ளம் போன்ற இடற்கை இடர்பாடுகளால் வேளாண் தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. தற்போது  ரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.நெல் பயிருக்கு தழைச்சத்து, மணிச்சத்து கிடைக்கக்கூடிய அடியுரம் டிஏபி 50 கிலோ மூட்டை ₹1,425ஆக உயர்ந்துள்ளது. கடந்த பருவத்தில் டிஏபி 50 கிலோ மூட்டை ₹1,150 ஆக இருந்தது. பொட்டாஷ்  விலை 20 சதவீதம் உயர்ந்துவிட்டது. 50 கிலோ மூட்டை ₹750ல் இருந்து ₹950 ஆக உயர்ந்துவிட்டது. காம்பளக்ஸ் உரம் மூட்டை ₹930ல் இருந்து ₹1,050ஆக உயர்ந்துள்ளது. ஜிங்க் சல்பேட் கிலோ ₹55ல்  இருந்து ₹70 ஆக உயர்ந்துள்ளது. யூரியா விலையில் மாற்றம் இல்லை. உரங்களின் விலையை கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையை தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டதால் இந்த விலை உயர்வு என  தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: